Payload Logo
கிரிக்கெட்

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

Author

gowtham

Date Published

Tiruppur Tamizhans

சென்னை :தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது. இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, திருப்பூர் தமிழன்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜாவின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு விளையாடிய திண்டுக்கல் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மொத்தத்தில் 14.4 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, திருப்பூருக்கு அபார வெற்றியைத் தேடித்தந்தது.முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை அமைத்தது. அணியின் முதுகெலும்பாக விளங்கிய வீரர்கள் சிலரின் ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான விக்னேஷ் மற்றும் ஆர். சாய் கிஷோர் ஆகியோர் அதிரடியாக ஆடி, அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர். மிடில் ஆர்டரில் வந்த வீரர்களும் சிறப்பாக பங்களித்து, ரன்களை குவிக்க உதவினர். திருப்பூரின் பேட்டிங் வரிசை ஆக்ரோஷமாக ஆடியதுடன், திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டது.221 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, திருப்பூர் தமிழன்ஸின் பந்துவீச்சு தாக்குதலுக்கு முன்னால் தடுமாறியது. சாய் கிஷோரின் சுழற்பந்து வீச்சு மற்றும் அவரது அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, திண்டுக்கல் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த சரிந்தன. இதன் காரணமாக, திண்டுக்கல் அணி வெறும் 14.4 ஓவர்களிலையே 102 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, பெரும் தோல்வியை சந்தித்தது.