Payload Logo
உலகம்

அமெரிக்காவில் கைது செய்யப்பட் டிக்டாக் பிரபலம்.! பின்னர் நடந்தது என்ன.?

Author

gowtham

Date Published

khaby lame -tiktok

லாஸ் வேகாஸ் :அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. அதிகரித்து வரும் அமைதியின்மையைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்தார்.

இந்த நிலையில், டிக்டாக் பிரபலம் காபி லேம், விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கி இருந்ததாக லாஸ் வேகாஸில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டைச் சேர்ந்த இவர், கைதுக்குப் பின் அமெரிக்காவை விட்டு வெளியேற சம்மதித்ததால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25 வயதான இவர் இத்தாலி நாட்டில் குடியுரிமை பெற்றுள்ளார். அவருக்கு டிக்டோக்கில் மட்டும் 162 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். கொரோனா காலகட்டத்தின் போது உலகளவில் புகழ் பெற்றார். அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் தனது வீடியோக்களில் வாழ்க்கை ஹேக்குகளைக் சுட்டி காட்டுகிறார்.இந்த கைது நடவடிக்கை குறித்து ICE செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், "ஜூன் 6 ஆம் தேதி, அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு, 25 வயதான இத்தாலிய குடிமகனான செரிங்கே கபேன் லாமேயை, நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில், குடியேற்ற விதிமீறலுக்காகக் கைது செய்தது. லாமே ஏப்ரல் 30 ஆம் தேதி அமெரிக்காவிற்கு வந்து, விசா காலாவதியான பிறகும் தங்கியிருந்தார். இதனால், கைது செய்யப்பட்ட அதே நாளில் லாமேக்கு தன்னார்வமாக வெளியேற அனுமதி வழங்கப்பட்டது, இதனால் அவர் முறையான நாடுகடத்தல் உத்தரவு இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.