மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!
Author
bala
Date Published

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த புகாருக்கு, விஜய் சேதுபதி மன்னிப்பு கோரியுள்ளார். “எங்கள் தரப்பில் இருந்து யாருக்கேனும் அழைப்பு வந்து, மிரட்டல் நடந்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்,” என்று அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இந்த சம்பவம், சூர்யாவின் முதல் படத்தின் விளம்பர நடவடிக்கைகளைச் சுற்றி எழுந்த சர்ச்சையால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நடித்துள்ள பீனிக்ஸ் படத்தின் விளம்பரங்களைப் பொறுத்தவரை, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் சிலரால் விமர்சிக்கப்பட்டதாகவும், இதனால் சூர்யா தரப்பு சிலரை அழைத்து அந்த வீடியோக்களை நீக்கச் சொல்லி மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவிற்கு பிறகு சிலருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும்போது விஜய் சேதுபதி மகன் கொடுத்த செய்கைகள் பல படங்களில் நடித்த நடிகர்கள் போல் உணர்வதாக விமர்சனங்கள் எழுந்தது. ஏற்கனவே. முன்னதாக படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அப்பா வேற நான் வேற என சூர்யா விஜய் சேதுபதி பேசியது ஒரு பக்கம் விமர்சனமும் ஆனது. அந்த விமர்சனங்களால் மனமுடைந்த சூர்யா விஜய் சேதுபதி நான் பேசியது தவறு தான் என அடுத்ததாக வருத்தமும் தெரிவித்தார். இருப்பினும் அவர் மீது எழுந்த விமர்சனங்கள் மற்றும் நிற்கவில்லை என்று சொல்லலாம். விமர்சனங்களை கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம் சூர்யா விஜய் சேதுபதி படத்தில் கவனத்தை செலுத்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த சர்ச்சையை தொடர்ந்து மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது சினிமா வட்டாரத்தில் ட்ரெண்டிங்காவும் மாறியுள்ளது. விஜய் சேதுபதி, இந்த சம்பவத்தை அமைதியாக கையாள முயன்று, பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு, பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்தார். விஜய் சேதுபதியின் மன்னிப்பு, இந்த சர்ச்சையை சற்று அமைதியாக்க ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது. சூர்யா சேதுபதி நடித்துள்ள இந்த படம் வரும் ஜூலை 4-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.