''இதற்காக தான் டிரம்பின் அழைப்பை நிராகரித்தேன்'' - பிரதமர் மோடி விளக்கம்.!
Author
gowtham
Date Published

புவனேஸ்வர் :ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது இதுவே முதல் முறை. 18,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
அப்போது பொதுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, 2 நாள்களுக்கு முன்னதாக G7 மாநாட்டில் கலந்து கொள்ள கனடா சென்றிருந்தபோது, டிரம்ப் என்னை டெலிபோன் மூலம் 'வாஷிங்டன் வழியாக வாருங்கள், இரவு உணவு சாப்பிடலாம், பேசலாம்' என அழைப்பு விடுத்தார்.
ஆனால், “ஜெகநாத்-ன் பூமிக்கு வரவேண்டும் என்பதற்காக அதிபர் ட்ரம்பின் அழைப்பை பணிவுடன் நிராகரித்து விட்டேன்” என கூறியுள்ளார். பிரதமர் மோடி சமீபத்தில் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா சென்றிருந்தார். அவர் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட பல நாட்டுத் தலைவர்களைச் சந்தித்தார்.
ஜி7 உச்சிமாநாட்டின் போதுதான், டிரம்ப், பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் வாஷிங்டன் டிசிக்கு வருமாறு கேட்டுள்ளார். அதன் பின், தான் ஜெகந்நாதரின் பூமியான ஒடிசாவிற்கு நான் செல்ல வேண்டும் என்று கூறி, அழைப்பிற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன். அவரது அழைப்பை நான் பணிவுடன் நிராகரித்தேன்," என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.