ஜனநாயகன் கடைசி படமா? "விஜய் கூறியது இதுதான்" - மமிதா பைஜு சொன்னது என்ன.?
Author
gowtham
Date Published

அயர்லாந்து :இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும் தனது கடைசி படம் என்று விஜய் முன்னதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், தளபதி விஜய்யின் கடைசி படம் குறித்த பேசிய மலையாள நடிகை மமிதா பைஜுவின் சமீபத்திய வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அயர்லாந்தில் நடந்த கேரள கார்னிவலில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக மமிதா பைஜு கலந்து கொண்டார். மலையாளத்தில் பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளர், தளபதி விஜய்யுடன் 'ஜன நாயகன்' படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவரிடம் கேட்டார் .
அதற்கு பதிலளித்த மமிதா பைஜு, "ஒரு நாள், நாங்கள் ஒன்றாக படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது, 'ஜன நாயகன்' தான் அவருடைய கடைசி படமா என்று நான் அவரிடம் கேட்டேன். திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பது குறித்து, தேர்தல் முடிவுகளை பொறுத்து முடிவு செய்வேன் என்று விஜய் சார் வெளிப்படையாகச் சொன்னார்'' என்றார்.
unknown nodeமேலும், விஜய் உட்பட 'ஜன நாயகன்' படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பின் இறுதி நாட்களில் எப்படி உணர்ச்சிவசப்பட்டார்கள் என்பதையும் கூறினார்."படப்பிடிப்பின் கடைசி நாட்களில், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். நான் மட்டுமல்ல, படப்பிடிப்பில் இருந்த மற்ற அனைவரும் உணர்ச்சிவசப்பட்டோம். விஜய்யும் உணர்ச்சிவசப்பட்டு, புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க முடியவில்லை'' என்றார்.