Payload Logo
சினிமா

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை'' - நடிகர் அஜித்குமார்.!

Author

gowtham

Date Published

Ajith Kumar

சென்னை :நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு, அவர் "அஜித் குமார் ரேசிங்" என்ற ரெஸ் பைக் அணியைத் தொடங்கினார், அதன் பின்னர் அவர் துபாய் 24H தீரஜ் மற்றும் இத்தாலியின் முகெல்லோ 12H போன்ற பந்தயங்களில் பங்கேற்றுள்ளார்.

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அளித்த பேட்டியில், அஜித் தனது பயணம் மற்றும் விமர்சகர்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அதில், 'பிறர் சொல்லும் கருத்துக்களால் நான் என்னை ஒருபோதும் மாற்றிக் கொள்ளவில்லை. என் வாழ்வின் கடைசியில் கடந்த காலங்களை திரும்பி பார்க்கும்போது ஏதோ ஒன்றை முயற்சி செய்துள்ளேன் என்ற மகிழ்ச்சியை நான் உணரவேண்டும்' என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,“மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை வைத்து என்னை நான் எடைபோட்டுக் கொள்ள மாட்டேன், எனது சொந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். படப்பிடிப்பில் காயம் ஏற்படுவதை போலத்தான், ரேஸிங்கிலும், ஆனால் மிகவும் கவனமாக இருக்கிறேன், விரைவாக கற்றுக்கொள்கிறேன்.

நான் யார் என மற்றவர் சொல்லும் கருத்துகள் என்னை பாதிக்க ஒருபோதும் நான் அனுமதிக்கமாட்டேன். நான் முதலில் நடிக்க வரும்போது எனக்கு தமிழ் தெரியாது, அதற்காக நிறைய பயிற்சி எடுத்தேன். விரைவாக கற்றுக் கொண்டேன் எனது கடைசி காலத்தில் திரும்பிப் பார்க்கும்போது, நான் ஏதோ முயற்சித்திருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி.

பைக் ரேஸில் நான் முடிந்தவரை தொடர வேண்டுமென விரும்புகிறேன். கடவுளின் அருளால், என் உடல்நலம் நன்றாக உள்ளது. என் அணியும் குடும்பத்தினரும் என்னை ஆதரிக்கிறார்கள். 60 வயதிற்குப் பிறகும் பந்தய வீரர்கள் சுறுசுறுப்பாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன் - நான் ஏன் அப்படிச் செய்யக்கூடாது?” என்று அவர் தனது பைக் பந்தயம் எதிர்காலம் குறித்து உறுதியுடனும் நம்பிக்கையுடனும் கூறினார்.

unknown node