இந்த மகுடம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்! ஆர்சிபிக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Author
bala
Date Published

அகமதாபாத் :எப்போது இந்த கனவு நிறைவேறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது. இந்த ஆண்டு பெங்களூர் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், நேற்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சி பிஅணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளுக்கு 190 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே, போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக மகுடத்தை பெங்களூரு அணி முத்தமிட்டது.
இறுதிப்போட்டியில் பெங்களூர் வெற்றிபெற்றதற்கு அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
"இந்த ஆண்டு சீசன் பல ஆச்சர்யங்கள் நிறைந்திருந்தது. ஆர்.சி.பி கோப்பையை வென்றுள்ளது நிறைவான ஒரு முடிவு. விராட் கோலி இந்தக் கோப்பைக் கனவை பல ஆண்டுகளாக சுமந்துள்ளார். இப்போது இந்த மகுடம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்" எனவும் தெரிவித்ததோடு சென்னை குறித்தும் பதிவிட்டுள்ளார். "சென்னை சூப்பர் கிங்ஸிடம் இருந்து அடுத்த சீசனில் சிறப்பான COME BACK-யை எதிர்பார்க்கிறேன்” என முதல்வர் தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.
unknown node