Payload Logo
இந்தியா

விமான விபத்து.. அந்த ஒரு காரணத்தால் விமான விபத்தில் இருந்து தப்பிய பெண்.!

Author

gowtham

Date Published

Bhoomi Chauhan

அகமதாபாத் :லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் 1.38 மணியளவில் புறப்பட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில், இந்த விமானத்தில் லண்டன் செல்ல வேண்டிய பூமி சவுகான் என்ற பெண் பயணி, விபத்தில் இருந்து தப்பித்திருக்கிறார். போக்குவரத்து நெரிசல் காரணமாக விமான நிலையத்திற்கு 10 நிமிடம் தாமதமாகச் சென்றதே அதற்கு காரணம். பூமி சவுகான், விமானத்தைத் தவறவிட்ட பிறகு, மதியம் 1:30 மணிக்கு விமான நிலையத்திலிருந்து திரும்பினார்.

ஒரு கெட்டதிலும் அவருக்கு நன்மை கிடைத்திருக்கிறது, ஆங்கில ஊடகத்திற்கு இது குறித்து பேட்டியளித்த பூமி சவுகான், "விமான விபத்து குறித்து அறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன், அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. அந்தப் பத்து நிமிடங்களால்தான் என்னால் விமானத்தில் ஏற முடியவில்லை. அதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை" விநாயகர் தன்னை காப்பாற்றியதாக பிரமிப்புடன் கூறியுள்ளார்.

பூமி பிசோல் லண்டன் செல்லவிருந்தார். அவர் தனது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார். விடுமுறைக்காக இந்தியா வந்திருந்தார், அவரது கணவர் தற்போது பிரிட்டனில் இருக்கிறார். திருணம் முடிந்த கையோட பூமி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டனுக்குச் சென்றிருந்தார். இதற்குப் பிறகு, அவர் முதல் முறையாக இந்தியாவுக்கு வந்திருந்ததாக பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார் .