பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!
Author
gowtham
Date Published

நமீபியா :பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார். நமீபிய தலைநகர் விண்டோக்-கில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர், விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றார் 5 நாடுகள் பயணத்தின் நமீபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி நேற்று அந்நாட்டு அதிபருடன் பிரதிநிதிகள் நிலையில் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிபர் நெடும்போ நந்தி - நதைத்வா முன்னிலையில், இந்தியா - நமீபியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அப்பொழுது, மருத்துவம், மருந்தாக்கம், எரிசக்திப் பாதுகாப்புஉள்ளிட்ட துறைகளில், இருநாடுகளுக்கும் இடையே, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுதாயின. மேலும், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்பட்ள்ளது. ''Order of the Most Ancient Welwitschia Mirabilis'' விருதை பிரதமர் மோடிக்கு, நமீபியா நாட்டின் அதிபர் வழங்கினார். இதுவரை 27 நாடுகளின் விருதுகளைப் பெற்ற மோடி, இந்தச் சுற்றுப்பயணத்தில் மட்டும் 4 விருதுகள் பெற்றுள்ளார். முன்னதாக, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரேசில் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ் (Grand Collar of the National Order of the Southern Cross) விருதை, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவால் வழங்கி கௌரவித்தார்.