இணையத்தில் வெளியானது ''தக் லைஃப்'' திரைப்படம் - படக்குழு அதிர்ச்சி.!
Author
gowtham
Date Published

சென்னை :இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்து, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் "தக் லைஃப்" படம் இன்று (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இன்று காலை 9 மணி அளவில் வெளியான ''தக் லைஃப்'' படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை ஐகோர்ட் ஏற்கெனவே தடை விதித்துள்ள நிலையில், அதனை மீறியும் இணையதளத்தில் படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக செயல்படும் 793 இணைதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, படங்கள் வெளியீட்டுக்குப் பிறகு திருட்டுத்தனமாக (piracy) இணையத்தில் பரவுவது திரைத்துறையில் பெரும் பிரச்சினையாக உள்ளது. "தக் லைஃப்" படமும் இதற்கு விதிவிலக்கல்ல. இதுபோன்ற திருட்டு வெளியீடுகளை தடுக்க, திரைத்துறையும், ரசிகர்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
இவ்வாறு இணையத்தில் படம் கசிவதினால், திரையரங்க வசூலை பாதிக்கலாம். என்னதான் படக்குழு இதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஆனால் இதுபோன்ற கசிவுகளை முழுமையாக தடுப்பது சவாலாகவே உள்ளது.