Payload Logo
தமிழ்நாடு

'பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்'... இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் - விஜய்.!

Author

gowtham

Date Published

TVK Vijay

சென்னை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் செயற்குழு கூட்டத்தில், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, அதன் நிறுவனர் விஜயை கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. இதனை தொடர்ந்து, பரந்தூர் மக்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை ஸ்டாலின் கொடுக்க வேண்டும் எனவும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லை என்றால் பரந்தூர் மக்களை அழைத்து வந்து தலைமைச் செயலகத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிடும் நிலை உருவாகும் எனவும் விஜய் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பேசிய விஜய், ''பரந்தூர் மக்களை ஏன் முதல்வர் இப்போது வரை சந்திக்கவில்லை. இப்பவும் ஒன்றும் குறைந்துபோகவில்லை. பரந்தூரில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை, முதல்வர் நேரில் சந்தித்து பேச வேண்டும். அமைச்சர்களோ, அதிகாரிகளோ பேசக்கூடாது. நீங்களே போய் பேசணும். அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை நீங்களே கொடுக்கணும். இதையெல்லாம் செய்யாமல் முதல்வர் கடந்துபோக நினைத்தால், பரந்தூர் பகுதி விவசாயிகளையும் பொதுமக்களையும் நானே அழைத்து வந்து தலைமைச் செயலகத்தில் உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலைமை உண்டாகும். அப்படி ஒரு சூழலை நீங்க உண்டாக்க மாட்டீங்கன்னு நான் நினைக்கிறேன். அதையும் மீறி ஒரு சூழல் வந்தால், நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். தயாராக இருக்கிறேன்'' என்றார் .