தீரா சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...மன வேதனையில் விராட் கோலி!
Author
bala
Date Published

பெங்களூர் :ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 18-வருடங்களுக்கு பிறகு கோப்பை வென்ற காரணத்தால் அதனை ரசிகர்கள் நேற்று கொண்டாடி தீர்த்தனர். இந்த உற்சாக கொண்டாட்டம் தீராத சோகத்தில் முடியும் என யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாது என்கிற வகையில் பெரும் சோகமான சம்பவம் நடந்திருக்கிறது. அது என்னவென்றால், (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில், 11 பேர் சிக்கி உயிரிழந்தது தான்.
18 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆர்சிபி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் இந்த அவலம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் தங்களுடைய உங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சம்பவத்தை பார்த்து மனவேதனையில் பதிவு ஒன்றை வெளிட்டு உயிரிழந்தவர்களுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது " என்னால் இந்த சம்பவம் குறித்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத. உண்மையில் முற்றிலும் மனம் உடைந்துவிட்டேன்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதே சமயம் பெங்களூர் அணி நிர்வாகமும் இந்த சம்பவத்திற்கு இரங்கலை தெரிவித்துள்ளது. ரசிகர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முன்னுரிமை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் கூறி, நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவித்தது.
அதைப்போல, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, இந்த சம்பவத்தை “மனதை உலுக்கும் துயரம்” என கூறி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்தார். மைதானத்தின் கொள்ளளவு 35,000 ஆக இருக்க, எதிர்பாராதவிதமாக 2-3 லட்சம் பேர் கூடியதாகவும், இதற்கு தயாராக இல்லை எனவும் அவர் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.