Payload Logo
கிரிக்கெட்

டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம் : இளம் வீரர்களுக்கு டிப்ஸ் கொடுத்த சச்சின்.!

Author

gowtham

Date Published

Sachin Tendulkar - india team

இங்கிலாந்து :இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் மதியம் 3.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது. 2007-ஆம் ஆண்டுக்கு பின் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது.

இந்நிலையில், இன்று ஷுப்மன் கில் தலைமையில் களம் இறங்குகிறது இந்திய இளம் படை. சுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி 18 ஆண்டுகளாக வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்ற தீவிரம் காட்டும். அதே நேரத்தில் சொந்த மண்ணில் தோற்பதை இங்கிலாந்து விரும்பாது.

என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை வழங்கியயுள்ளார். இங்கிலாந்தில் விளையாடும்போது அணியின் நிலைமை, காற்றின் தரம், பிட்ச்சின் நிலை ஆகியவற்றை மனதில் கொள்ள வேண்டும்.

காலை நேரத்தில் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு அழகாக இருக்கும், அதை பயன்படுத்தி அதிக ரன்கள் அடிக்க முடியும்" என்றார். மேலும், வெளி உலகத்தை பற்றி கவலைப்படாமல், அணியின் நலனுக்காக துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும் என சுப்மன் கில்லுக்கு சச்சின் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

ஏனென்றால், அவர் அதிகமாக அட்டாக்கிங் கேப்டன்சி செய்கிறார். மிகவும் டிஃபன்சிவ் கேப்டன்சி செய்கிறார். அவர் அதை செய்யவில்லை, இதை செய்யவில்லை என வெளிப்புற சத்தங்களை விடுத்து, அணிக்கு என்ன தேவையோ அந்த முடிவுகளை தைரியமாக எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.