Payload Logo
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் - டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

Author

gowtham

Date Published

TASMAC

சென்னை :தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (AITUC) அறிவித்துள்ளது. தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கம் பங்கேற்கின்றனர்.

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். வரும் அக்டோபர் 2ம் தேதி காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை துவங்குவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள் நீண்ட காலமாக சம்பள உயர்வு கோரி வருகின்றனர். அவர்களின் பணி நிலைமைகள், நீண்ட பணி நேரம் மற்றும் போதிய ஊதியமின்மை ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளது. முன்னர், 2019-ல் இதேபோன்ற கோரிக்கைகளுக்காக காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது, ஆனால் அரசு இதற்கு உரிய தீர்வு அளிக்கவில்லை.

டாஸ்மாக் ஊழியர்கள், மது விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு தெளிவான கால அட்டவணை வெளியிட வேண்டும் என்றும், தங்கள் பணியை அரசு துறையில் வேலை என்று அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.