Payload Logo
தமிழ்நாடு

“தமிழகத்தில் எந்த கன்னட திரைப்படமும் வெளியாகாது” - கொந்தளித்த தி.வேல்முருகன்.!

Author

gowtham

Date Published

Velmurugan.T kamal

சென்னை :நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன.

இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், “கர்நாடகாவில் 'தக் லைஃப்' படம் ரிலீஸ் தொடர்பான வழக்கில், ஒரு கன்னடராக இருந்து மட்டுமே கமல் மீது கேள்விகளை தொடுத்துள்ளார் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா.

நீதிபதியாக இருப்பவர்களுக்கு மொழி, இனம், மதம் வேறுபாடு கிடையாது என்பார்கள். ஆனால், நாகபிரசன்னா ஒரு கன்னடராகவே வழக்கை அணுகியுள்ளார். கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன. கன்னட சினிமா வர்த்தக சபையும் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட அனுமதி கிடையாது எனக் கூறியுள்ளது.

அதற்கும் ஒருபடி மேலே சென்று, கன்னட இனவெறி அமைப்புகளை ஆதரிக்கும் வகையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியும், முதல்வருமான சித்தராமையா மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் போன்றோர், கமல்ஹாசனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 பாகங்கள் உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ்நாட்டில் 100 கோடிகளை வசூலித்திருக்கிறது. இதனை கன்னட மொழி திரைப்படங்களாக பார்க்காமல், திரைப்படமாக மட்டுமே தமிழர்கள் பார்த்தனர். கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் மொழி அரசியலாக பார்க்கப்பட்டிருக்கிறது.

எனவே, கமல்ஹாசன் நடித்துள்ள தக்ஃலைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியாக தடை இருக்கும் பட்சத்தில், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்தவொரும் கன்னட திரைப்படமும் வெளியாகாது'' என்று எச்சரித்துள்ளார்.

unknown node