Payload Logo
உலகம்

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ''இது வெறும் கீறல்தான்''- எலான் மஸ்க் பதிவு.!

Author

gowtham

Date Published

elon musk - Just a scratch

டெக்ஸாஸ் :அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு அருகிலுள்ள நிறுவனத்தின் ஸ்டார்பேஸ் வசதியில் அதன் பத்தாவது ராக்கெட்சோதனையின் போது, வெடித்துச் சிதறிய 'ஸ்டார் ஷிப் 36' ராக்கெட்டால் பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது.

நல்வாய்ப்பாக  விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ஸ்பேஸ் எக்ஸ் விளக்கம் அளித்துள்ளது. மேலும், அந்த ராக்கெட் வெடித்து சிதறிய போது, சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சிறிய அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், ஆனால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இது குறித்து, ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது எக்ஸ் பதிவில். ''இந்த சம்பவத்தை "வெறும் ஒரு கீறல்" என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

எலான் மஸ்க்கின் இந்த கருத்து, பின்னடைவுகள் இருந்தபோதிலும், ஸ்பேஸ்எக்ஸ் இந்த திட்டத்திற்கு உறுதியுடன் உள்ளது. அடுத்த சோதனைக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் எதிர்கால ஏவுதல்களைத் தொடர்வதற்கு முன்பு, இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, ஸ்பேஸ்எக்ஸ் முழுமையாக ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.