சற்று நேரத்தில் விண்வெளி பயணம்.., டிராகன் விண்கலனின் தொலைதொடர்பு சோதனை நிறைவு - ஸ்பேஸ் எக்ஸ்!
Author
gowtham
Date Published

அமெரிக்கா :சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம் -4' மனித விண்வெளி பயணத்துக்கு திட்டமிட்டது. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, போலாந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு மற்றும் அமெரிக்க வீரர் பெக்கி விட்சன் ஆகியோர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல தயார் நிலையில் உள்ளனர்.
பல்வேறு காரணத்தால் 6 முறை பயணம் தடைப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் 12.01 மணிக்கு இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாசா விண்வெளி தளத்தில் இருந்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு ஷுக்லா விண்ணுக்கு பறக்கிறார்.
unknown nodeமேலும் ஸ்பேஸ்எக்ஸ் வானிலை 90 சதவீதம் ஏவுதலுக்கு சாதகமாக இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வதற்காக புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் டிராகன் விண்கலத்தில் ஏறினர். மிஷன் பைலட்டாக சுபன்ஷு சுக்லா செயல்படும் நிலையில், 4 வீரர்களும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 14 நாட்கள் இருந்து, சுமார் 60 அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளனர்.
unknown nodeஇப்பொது, ஹட்ச் பாதுகாப்பாக மூடப்பட்டு, விண்கலனின் கசிவுகள் உள்ளதா என சரிபார்க்கப்பட்டு, அனைத்து தகவல் தொடர்பு மற்றும் சூட் சோதனைகளும் முடிந்துவிட்டன, இருக்கைகள் ஏவப்படுவதற்காக சரிசெய்யப்பட்டு, Ax-4 குழுவினர் ஏவலுக்குத் தயாராக உள்ளனர்" என்று ஸ்பேஸ் எக்ஸ் தனது x பதிவில் தெரிவித்துள்ளது.
unknown node