Payload Logo
இந்தியா

"140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா"- பிரதமர் மோடி வாழ்த்து.!

Author

gowtham

Date Published

Space X - ISRO

டெல்லி :இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி பயணத் திட்டத்தின்படி பிறநாட்டு விண்வெளி வீரர்கள் 3 பேருடன் சுக்லாவும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார்.

இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர், விண்வெளிக்கு செல்லும் 2-வது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். பணி 6 முறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, சுப்ன்ஷு சுக்லா இறுதியாக புறப்பட்டார். அவரது ஆக்சியம்-4 பணி வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில், 140 கோடி இந்தியர்களின் சார்பாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியா, ஹங்கேரி, போலந்து, அமெரிக்க வீரர்களை ஏற்றிச் சென்ற விண்வெளிப் பயணத்தின் வெற்றிகரமான ஏவுதலை வரவேற்கிறோம் 1.4 பில்லியன் இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள், அபிலாஷைகளை தன்னுடன் சுமந்து செல்லும் சுபான்ஷு சுக்லா சுபான்ஷு சுக்லாவுக்கும் மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node