Payload Logo
கிரிக்கெட்

ஆர்சிபிக்கு முதல் அடி: தூக்கி அடித்த சால்ட்.., அலேக்காக கேட்ச் புடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.!

Author

gowtham

Date Published

Shreyas Iyer - Phil Salt

அகமதாபாத்:பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. சரியாக 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தளது. இதனால், முதலில் பெங்களூரு அணி அணி பேட்டிங் செய்து வருகிறது. இதனிடையே, பெங்களூர் அணியின் ஓபனிங் வீரர் பில் சால்ட், அந்த அணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகினதும் ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸாக அமைந்தது.

அதாவது, குழந்தை பிறந்ததை அடுத்து தனது காதலியை பார்க்க சொந்த நாடான இங்கிலாந்துக்கு சென்ற அவர், ஐபிஎல் இறுதி போட்டி நடக்கும் அகமதாபாத்திற்கு திரும்பினார். முன்னதாக, அவர் இந்த போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்குரியதாகவே இருந்த நிலையில், இன்று தான் அந்த சஸ்பென்ஸ் உடைந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  பெங்களூரு அணி தொடக்க வீரர் பில் சால்ட் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார்.

இருப்பினும், 2-வது ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து ஆர்சிபி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இதன்மூலம், பெங்களூர் அணிக்கு இது முதல் அடியாக பார்க்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்து வரும் பெங்களூர் அணி 5 ஓவர் முடிவில் 45 ரன்களை குவித்துள்ளது. முதல் ஓவரிலேயே அதிரடியாக சிக்ஸ் அடித்து பஞ்சாப் அணிக்கு பயம் காட்டினார் சால்ட்.

ஆனால், 2-வது ஓவரில் மீண்டும் சிக்ஸ் அடிக்க பந்தை தூக்கி அடித்தபோது, ஷ்ரேயஸ் ஐயரின் கைகளில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேரினார். அடுத்த 2 ஓவர்களில் ரன்கள் சேர்ப்பதில் அகர்வாலும் கோலியும் நிதானம் காட்டினர். அதன்படி, பவர் பிளே ஓவர்கள் முடிவில் 45 ரன்களே சேர்ந்தது.