Payload Logo
விளையாட்டு

29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து ஷாக் பூரன்.!

Author

gowtham

Date Published

Nicholas Pooran

மேற்கிந்திய தீவு :வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் பூரன், தனது இன்ஸ்டாகிராமில் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவின் மூலம் அவர் இந்த தகவலை தெரிவித்து கொண்டார்.

29 வயதிலேயே ஓய்வை அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் நிறைய யோசித்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பதிவில், 'மெரூன் நிற ஜெர்சியை அணிவது, தேசிய கீதத்திற்காக நிற்பது மற்றும் ஒவ்வொரு முறையும் மைதானத்தில் உங்கள் அனைத்தையும் கொடுப்பது. இது எனக்கு என்ன அர்த்தம் என்பதை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கடினம் என்றும், அணியின் கேப்டனாக இருப்பது நான் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருக்கும் ஒரு மரியாதை' என்று குறிப்பிட்டுள்ளார்.பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரன் (29) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதுவரை 106 டி 20 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 2,275 ரன்களை குவித்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி 20-ல் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். அதே நேரத்தில் 61 ODI-ல் விளையாடி 1,983 ரன்களையும் அவர் அடித்துள்ளார். அவருக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றையும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியிட்டுள்ளது

2019 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக சிறிது காலம் இடைநீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், அவர் விரைவில் மீண்டும் களமிறங்கி, கீரோன் பொல்லார்ட் இல்லாத நிலையில் அணியின் தலைவராகவும் செயல்பட்டார்.

அவரது தலைமையில், மேற்கிந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. 2022 ஆம் ஆண்டில், அவர் நிரந்தரமாக வெள்ளை பந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு அவர் கேப்டன் பதவி விலகினார்.