Payload Logo
இந்தியா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு!

Author

bala

Date Published

sonia gandhi

டெல்லி :காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசியத் தலைவருமான சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

78 வயதான சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது நிலையாக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சோனியா காந்தியின் உடல்நலம் குறித்த செய்தி வெளியானதையடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரது விரைவான குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கட்சியின் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அவரை சந்தித்து நலம் விசாரித்ததாகத் தகவல்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சி, சோனியாவின் உடல்நிலை குறித்து அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடவில்லை என்றாலும், அவரது சிகிச்சை முறையாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதே சமயம், மருத்துவமனை வட்டாரங்கள், சோனியாவின் சிகிச்சை முடிந்தவுடன் மேலதிக விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளன.