Payload Logo
கிரிக்கெட்

டிஎன்பிஎல் : திருச்சி அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேலம் அணி.!

Author

gowtham

Date Published

SSSvsTGC

கோவை :நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 போட்டியின் 7-வது ஆட்டத்தில், சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இதில், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. முதலில் பேட் செய்த சேலம் அணி சார்பாக, ஹரி நிசாந்த் 83 ரன்னிலும், சன்னி சந்து 45 ரன்னிலும் அவுட்டானர். இறுதியில், சேலம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் அடித்தது.

திருச்சி வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் சிறப்பாக பந்துவீசினார். வெறும் 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர், 180 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி, 10வது ஓவரில் 6 விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்து தடுமாறிய போதிலும், அதிரடியாக விளையாடியது.

ஆனால், ஜெகதீசன் கவுசிக் (62), ராஜ்குமார் (59) ஆகியோரின் போராட்டத்திற்குப் பிறகு, அவர்களைத் தொடர்ந்து வசீம் அகமது 16 ரன்களிலும், முகிலேஷ் 2 ரன்களிலும், சஞ்சய் யாதவ் 11 ரன்களிலும், ஜாபர் ஜமால் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், 172 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சேலம் அணியின் மொஹமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.