Payload Logo
உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

Author

gowtham

Date Published

Ukraine Russia War

கீவ் :ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு, 550 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள் பயன்படுத்தி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்படி, கீவ், சுமி, கார்கிவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்னிகிவப் ஆகிய நகரங்கள் இத்தாக்குதலில் முக்கிய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழப்பு, 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யா சுமார் 7 மணி நேரத்திற்குள் நூற்றுக்கணக்கான ட்ரோன்களுடன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. நேற்றிரவு ரஷ்யா நாட்டின் பல பகுதிகளைத் தாக்கியதாகவும், ஐந்து ஆம்புலன்ஸ்கள் சேதமடைந்தன என்றும் உக்ரைன் விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. இதில் 550 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் ஒருவர் இறந்ததாகவும், 26 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை தொலைபேயில் தொடர்பு கொண்டதாக சொல்லப்படுகிறது. உக்ரைனின் வான் பாதுகாப்பை எவ்வாறு வலுப்படுத்தலாம், அமெரிக்காவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான கூட்டு ஆயுத உற்பத்தி மற்றும் ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பரந்த அமெரிக்க தலைமையிலான முயற்சிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.