Payload Logo
உலகம்

BTS கச்சேரி ஆரம்பம்..! கட்டாய இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட RM மற்றும் V.!

Author

gowtham

Date Published

BTS - RM & V

கொரியா :BTS  உறுப்பினர்களான (பாடகர்கள்) RM (கிம் நம்-ஜூன்) மற்றும் V (கிம் டே-ஹியுங்) ஆகியோர் தென் கொரியாவின் கட்டாய இராணுவ சேவையை முடித்துவிட்டு இன்று (ஜூன் 10) வீடு திரும்பியுள்ளனர். ஆர்.எம் மற்றும் வி ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், இருவரும் முதல் முறையாக பத்திரிகையாளர்கள் முன் தோன்றினர்.

தென் கொரியாவில், 18 முதல் 35 வயதுடைய ஆண்கள் அனைவரும் சுமார் 18-21 மாதங்கள் இராணுவ சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. BTS உறுப்பினர்களும் இதற்கு விதிவிலக்கல்ல, RM மற்றும் V ஆகியோர் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 11, 2023 அன்று இராணுவத்தில் சேர்ந்தனர்.

RM ராணுவத்தில், 15வது காலாட்படை பிரிவின் இராணுவ இசைக்குழுவில் (Military Band) பணியாற்றினார், இது ஹவாச்சியோன் என்ற இடத்தில் உள்ளது.V சுஞ்சியோன் பகுதியில் உள்ள 2வது பிரிவு இராணுவ காவல்துறையின் சிறப்பு பணிக்குழுவில் (Special Duty Team - SDT) பணியாற்றினார்.

இந்த நிலையில், இருவரும் தங்களது 18 மாத சேவையை முடித்து, தென் கொரியாவின் சுஞ்சியோன் என்ற இடத்தில் உள்ள விளையாட்டு பூங்காவில் விடுவிக்கப்பட்டனர். அவர்களை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் (ARMY) மற்றும் ஊடகங்கள் அங்கு கூடியிருந்தனர். இந்த BTS குழுவினருக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, அதிலும் குறிப்பாக பெண்கள் மனதில் இவர்கள் மிகப்பெரிய இடம் பிடித்திருக்கி றார்கள் என்றே சொல்ல வேண்டும்.

தற்போது, அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.V மற்றும் RM தங்கள் அந்நாட்டு ராணுவ சீருடையில் கடைசியாக ஒரு முறை போஸ் கொடுத்துள்ளனர். RM, இராணுவ சீருடையில் சாக்ஸபோன் (saxophone) வாசித்து ரசிகர்களுக்கு ஒரு சிறிய நிகழ்ச்சி அளித்தார். V பூங்கொத்துகளை ஏந்தி, ரசிகர்களையும் ஊடகங்களையும் புன்னகையுடன் வரவேற்றார்.

unknown node

பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய V, “எங்களுக்காக காத்திருந்த ARMY-களுக்கு நன்றி. இன்னும் கொஞ்சம் பொறுத்திருங்கள், நாங்கள் அற்புதமான நிகழ்ச்சியுடன் திரும்புவோம்,” என்று கூறினார். இதன்மூலம், 2025 ஜூன் மாதத்திற்குப் பிறகு BTS ஏழு உறுப்பினர்களும் மீண்டும் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.BTS குழுவில் RM, Jin, Suga, J-Hope, Jimin, V, மற்றும் Jungkook ஆகியோர் உள்ளனர். ஏற்கனவே, ஜின் (ஜூன் 2024) மற்றும் ஜே-ஹோப் (அக்டோபர் 2024) ஆகியோர் சேவையை முடித்து விடுவிக்கப்பட்டனர். ஜிமின் மற்றும் ஜங் குக் ஆகியோர் நாளை (ஜூன் 11) விடுவிக்கப்படுவார்கள். இப்போது RM மற்றும் V-யின் திரும்பியதால், 2025-ல் முழு குழுவும் மீண்டும் ஒன்றிணைந்து நிகழ்ச்சிகள், இசை மற்றும் உலக சுற்றுப்பயணங்கள் மேற்கொன்டு இசைமழையில் நினையவிடுவார்கள் என என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.