Payload Logo
உலகம்

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

Author

gowtham

Date Published

Trump - Tesla Red car

லாஸ் ஏஞ்சல்ஸ் :அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், ஜனாதிபதி டிரம்ப் தனது சிறப்பு சிவப்பு டெஸ்லா காரை விற்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதன் எதிரொலியாக மார்ச் மாதம் வாங்கிய தனது டெஸ்லா சிவப்பு காரை டிரம்ப் இனி பயன்படுத்த மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆம்... டிரம்ப் மற்றும் மஸ்க் சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் எதிராக கருத்துக்களை வெளியிட்ட ஒரு நாளுக்குப் பிறகு டொனால்ட் டிரம்ப் தனது டெஸ்லா காரை விற்பனை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்கிற அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டது.

இது அவர்களின் தனிப்பட்ட உறவைப் பாதிப்பது மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளையும் பாதிக்கலாம். தனது டெஸ்லா காரை விற்பனை செய்வது குறித்து டிரம்ப் பரிசீலிப்பது இந்தப் பதற்றத்தின் மற்றொரு அறிகுறியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.டிரம்ப் இந்த டெஸ்லா காரை 80,000 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார். இது சுமார் 80 லட்சம்  என இந்திய ரூபாயில் மதிப்பிடப்படுகிறது. டெஸ்லா மாடல் S இன் இந்த வகை அதன் அதீத வேகம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 மைல்கள் அதாவது மணிக்கு தோராயமாக 322 கிலோமீட்டர்கள் ஆகும். இந்த மாடல் மிகவும் வேகமானது, இது மணிக்கு 0 முதல் 60 மைல்கள் வரை 2 வினாடிகளுக்குள் வேகத்தை அதிகரிக்கும்.அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உடனான மோதல் போக்கால் கடும் வீழ்ச்சியை சந்தித்தது டெஸ்லா நிறுவனம். எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் டெஸ்லா சந்தை மதிப்பு ஒரே நாளில் 14% சரிவைக் கண்டுள்ளது. இதனால்,  சுமார் 12 லட்சத்து 85 ஆயிரத்து 770 கோடி ரூபாய் எலான் மஸ்க் அவர்களுக்கு இழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.