Payload Logo
கிரிக்கெட்

யார் கனவு நனவாகும்? 191 ரன் அடிச்சா கப் உங்களுக்கு.., சவாலான இலக்கு வைத்த ஆர்சிபி.!

Author

gowtham

Date Published

Royal Challengers Bengaluru vs Punjab Kings

அகமதாபாத் :இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார். இந்த இரு அணிகளும் பிளையிங் லெவன் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

தற்பொழுது, பேட்டிங் செய்து வரும் ஆர்சிபி அணிக்கு தொடக்கம் நன்றாக அமைவியவில்லை. ஆம், முதல் அடியாக கைல் ஜேமிசன் பந்துவீச்சில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர் பில் சால்ட், பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பில் சால்ட் வெறும் 9 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இதையடுத்து ஆர்சிபி அணிக்கு இரண்டாவது அடியாக சாஹல், 24 ரன்களில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் மயங்க் அகர்வாலை கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். 10 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் குவித்தனர். இதன்படி, பவர் பிளே ஓவர்கள் முடிவில் 45 ரன்களே சேர்த்தது பெங்களூர் அணி.

பின்னர், கேப்டன் ரஜத் படிதர் 26 ரன்கள் எடுத்து கைல் ஜேமிசன் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து உமர்ஜெய் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், அவர் அரைசதத்தை தவறவிட்டார்.

17வது ஓவரில் ஆர்சிபி அணிக்கு ஐந்தாவது அடி விழுந்தது. கைல் ஜேமிசனின் பந்தில் லியாம் லிவிங்ஸ்டோன் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக, ரொமாரியோ ஷெப்பர்ட் 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து அவுட்டாக, க்ருணால் பாண்டியா 4 ரன்கள் எடுத்து அவுட்டானார். மேலும், புவனேஷ்வர் குமார் 1 ரன் எடுத்து அவுட்டானார்.

பஞ்சாப் அணிக்காக கைல் ஜேமிசன் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். உமர்சாயைத் தவிர, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் விஜய்குமார் வைஷாக் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இப்படி அடுத்தடுத்த விக்கட்டுகளில் ஆர்சிபி அணி சரிய, இறுதியில், ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. இப்பொது, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்க போகிறது.