11 ரசிகர்கள் இறந்த விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப்பதிவு.!
Author
gowtham
Date Published

கர்நாடகா :பெங்களூருவில் நேற்றைய தினம் நடந்த கூட்ட நெரிசல் தொடர்பாக, பெங்களூரு காவல்துறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி), கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ) மற்றும் நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டி.என்.ஏ நெட்வொர்க் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
எம். சின்னசாமி மைதானத்தில் ஒரு கொண்டாட்ட நிகழ்வுக்கு முன்னதாக இரண்டு நுழைவு வாயில்கள் வழியாக ஏராளமான ரசிகர்கள் திரண்டதைத் தொடர்ந்து, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 47 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள கப்பன் பார்க் காவல்துறை, மேலே குறிப்பிட்ட மூன்று நிறுவனங்கள் மீதும் அலட்சியத்திற்காக BNS பிரிவு 105, 118,120 இன் கீழ் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
unknown nodeஇதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட நீதிபதி ஜி ஜெகதீஷை அம்மாநில அரசு நியமித்துள்ளது. இன்று சின்னசாமி மைதானத்திற்குச் சென்ற ஜெகதீஷா, கூட்டம் கூட்டமாக மாறுவதற்கு முன்பு, அங்குள்ள வாயில்களைப் பார்வையிட்டார். இன்று முதல் விசாரணையைத் தொடங்கியதாகவும், 15 நாட்களுக்குள் தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆர்சிபி நிர்வாகம் நிவாரணம் அறிவித்துள்ளது. பலியான 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், படுகாயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு' RCB CARES' மூலம் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.