Payload Logo
இந்தியா

அகமதாபாத் விமான விபத்து: சகோதரரின் இறுதி ஊர்வலத்தில் ரமேஷ்.., சோகக் காட்சி.!

Author

gowtham

Date Published

Ramesh Vishwas Kumar

குஜராத் :கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸ் குமார் ரமேஷ், விமான விபத்தில் உயிரிழந்த தன் சகோதரர் அஜய்யின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் இன்னும் முழுதும் குணமாகாத நிலையில், குஜராத் அருகேயுள்ள டியு தீவில் நடந்த தனது சகோதரரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ரமேஷ் விஸ்வாஸ் குமார், தனது சகோதரரின் அவரது உடலை தோள்களில் சுமந்து தகன மைதானத்திற்குச் செல்வதை நெஞ்சை உருக்கும் வீடியோ காட்டுகிறது. மேலும், விபத்தில் உயிரிழந்த மேலும் ஏழு பேரின் உடல்களும் இறுதிச் சடங்குகளுக்காக டியு தீவிற்குக் கொண்டு வரப்பட்டது.

unknown node

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 158 பேரின் உடல்கள் உறவினர்களிடம்| ஒப்படைத்துள்ளதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. இதுவரை 184 பயணிகளின் உடல்கள் DNA மூலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.