''என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி இருந்தது'' - ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு.!
Author
gowtham
Date Published

விருதுநகர் :பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், "“என் வீட்டில், நான் உட்காரும் இடம் அருகேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர்.
அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அது லண்டனில் இருந்து வாங்கி வரப்பட்டுள்ளது. சாதாரணமானது அல்ல.. மிகவும் விலை உயர்ந்த கருவி, நேற்று முன்தினம் ஒட்டு கேட்கும் கருவி இருந்ததைக் கண்டறிந்து எடுத்தோம்'' என்று கூறியுள்ளார்.
ராமதாஸ்-க்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவும் நிலையில், ராமதாஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து ஆராயப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.