Payload Logo
தமிழ்நாடு

“கூட்டணி பற்றிப் பேசி முடிவு செய்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை” - ராமதாஸ்.!

Author

gowtham

Date Published

Ramadoss - PMK

சென்னை :கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை என்பது அரசியல் வட்டாரத்தில் ட்ரென்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறது. இன்றைய தினம் அன்புமணியுடன் முரண்பாடு இல்லை என ராமதாஸ் கூறியுள்ளார். இதன் மூலம் ஒரு வழியாக பாமகவில் தந்தை - மகனிடையே நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்,” நான் சென்னைக்கு என்னுடைய சொந்தங்களை பார்ப்பதற்காக செல்கிறேன். குழந்தைகள், பேரன், கொள்ளு பேரன் ஆகியோரை பார்க்க செல்கிறேன். மீண்டும் திங்கள்கிழமை வருகிறேன். அதன்பிறகு செவ்வாய்கிழமை உங்களை சந்திக்கிறேன்” என தெரிவித்தார்.

மேலும், முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும் இனி அனைத்தும் நல்லவையாக நடக்கட்டும் என்றார். மேலும், கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும், பாஜகவில் இருந்து அழைப்பு வரவில்லை என்றும் கூறினார்.

முடிந்துபோன விஷயங்களை பேச வேண்டாம், இனி நடக்கப் போவதை பேசுவோம், பாமகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு ஏற்படும். கூட்டணி பற்றிப் பேசி முடிவு செய்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை. எல்லா பிரச்சினைக்கும் தீர்வு உள்ளது, தீர்வு இல்லாமல் எதுவுமில்லை. யாருடன் கூட்டணி என்பது விரைவில் பேசி முடிவு செய்யப்படும், நீங்கள் நினைக்கும் கூட்டணியில் பாமக இருக்கு'' என்று கூறியுள்ளார்.