Payload Logo
இந்தியா

''பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மனதை நொறுக்கியது'' - ராகுல் காந்தி இரங்கல்.!

Author

gowtham

Date Published

bengaluru rcb Rahul Gandhi

கர்நாடகா :பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக அரசு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ''பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஆர்.சி.பி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் வருத்தம் அடையச் செய்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன், இந்த துக்கத்தில் நான் பெங்களூரு மக்களுடன் துணை நிற்கிறேன்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கர்நாடக அரசு அனைத்து உதவிகள் மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த சோகம் ஒரு வேதனையான நினைவு, எந்த கொண்டாட்டமும் மனித உயிருக்கு மதிப்புக்குரியது அல்ல. பொது நிகழ்வுகளுக்கான ஒவ்வொரு பாதுகாப்பு நெறிமுறையும் மதிப்பாய்வு செய்யப்பட்டு கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் - உயிர்கள் எப்போதும் முதலில் வர வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ள்ளார்.

unknown node