மகாராஷ்டிரா தேர்தல்: ''வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக'' - ராகுல் காந்தி வலியுறுத்தல்.!
Author
gowtham
Date Published

மகாராஷ்டிரா :மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து இன்று(ஜூன்.07) காலை தனது எக்ஸ் பதிவில் குற்றம் சாட்டினார்.
அதாவது, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளர் பட்டியலில் முறைகேடு (Match Fixing) செய்து வெற்றி பெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆங்கில பத்திரிகைக்கு அவர் எழுதிய கட்டுரையில், 'வாக்காளர் பட்டியல் மற்றும் சிசிடிவி போன்றவை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகள்தானே தவிர, பூட்டி வைக்கும் அணிகலன்கள் அல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது, ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ''உங்களிடம் மறைக்க எதுவும் இல்லையென்றால், எனது கட்டுரையில் உள்ள கேள்விகளுக்கு பதிலளித்து அதை நிரூபிக்கவும். மராட்டிய தேர்தல் குறித்து மறைப்பதற்கு எதுவும் இல்லையென்றால், அனைத்து பூத்களின் மாலை 5 மணிக்குப் பிறகான CCTV காட்சிகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.
அனைத்து மாநிலங்களுக்கும், அண்மையில் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களின் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட வேண்டும்''என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node