Payload Logo
கிரிக்கெட்

பஞ்சாப் vs மும்பை: மழை காரணமாக குவாலிஃபையர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம்.!

Author

gowtham

Date Published

MI vs PBKS

அகமதாபாத் :மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. ஒருவேளை மழையால்  இந்த போட்டி ரத்தானால், ரிசர்வ் டே விதி கிடையாது. அதாவது, புள்ளிப் பட்டியலில் முதலில் இருக்கும் பஞ்சாப் அணி தானாகவே ஃபைனலுக்கு முன்னேறிவிடும்.

மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறிவிடும். அகமதாபாத்தில் ஏற்கனவே நேற்று மழை பெய்ததால், பஞ்சாப் -ன் பயிற்சி ஆட்டம் முற்றிலும் தடைபட்டது.   இப்பொழுது, தொடர்ந்து மழை பெய்து வருவதால், அவ்வாறு மழை பெய்து போட்டி நடக்கவில்லை என்றால், புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ள பஞ்சாப் (19 புள்ளிகள்) ஃபைனலுக்கு செல்லும்.