Payload Logo
தமிழ்நாடு

''விருதுகள், மானியங்களை விரைந்து வழங்கிடுக"- முதல்வர் ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம்.!

Author

gowtham

Date Published

Film Active Producers Association- mk stalin

சென்னை :தமிழக அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படங்களுக்கான மானியங்கள் கடந்த 2016 முதல் 2022 வரை நிலுவையில் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், ''தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து. தமிழ் திரைப்படங்களின் வளர்ச்சிக்கு உதவியதற்கு தங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறும் இந்த தருணத்தில் தமிழ் திரைப்படங்களுக்கான, தமிழக அரசின் விருதுகள் மற்றும் தமிழக அரசின் மானியம் வழங்குவதற்கு 2016 வருடம் முதல் 2022 வரைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு திரைப்படங்களும் அரசு உருவாக்கிய குழுக்குள் மூலம் பார்க்கப்பட்டன.

ஆனால், இந்த ஏழு வருடத்திற்கான விருதுகளும். மானியங்களும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தமிழ் திரைப்பட துறையை சார்ந்த பல கலைஞர்களும், தயாரிப்பாளர்களும் தமிழக அரசின் விருதுகளுக்காகவும், அரசு வழங்கும் மானியத்திற்காகவும் பல வருடங்களாக காத்திருக்கிறார்கள்.

தமிழக அரசு, தமிழ் திரைப்பட துறைக்கு, நிலுவையில் உள்ள ஏழு வருடத்திற்கான தமிழக அரசின் விருதுகளையும். திரைப்படங்களுக்கான மானியத்தையும் விரைவில் வழங்கி, திரைப்படத் துறையும் வளர்ச்சி அடைய உதவுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

2025-ம் வருடத்தின் ஐந்து மாதங்கள் முடிந்த நிலையில், 2023 மற்றும் 2024 வருடங்களுக்கான தமிழக அரசின் விருதுகள் மற்றும் மானியத்திற்கான அறிவிப்புகள் இன்னமும் வெளியிடப்படவில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். அவைகளும், துரிதமாக அறிவிக்கப்பட்டு, விருதுகளும் மானியமும் இந்த இரண்டு வருடங்களுக்கும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

unknown node