''வீரத்தின் அடையாளம்'' வீட்டில் சிந்தூர் மரக்கன்றுகளை நட்டார் பிரதமர் மோடி.!
Author
gowtham
Date Published

டெல்லி :இன்று, உலக சுற்றுச்சூழல் தினம். பருவநிலை மாறுபாடு, வெப்பநிலை உயர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ வீட்டில் சிந்தூர் மரக்கன்றை நட்டார். கடந்த மே 25-26 தேதிகளில் குஜராத்திற்கு பயணம் செய்தபோது, கட்ச்சில் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் துணிச்சலை வெளிப்படுத்திய பெண்கள் குழுவால் இந்த செடி அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
டெல்லியில் உள்ள பகவான் மஹாவீர் வனஸ்தலி பூங்காவில் மரக்கன்றுகளை நட்டிய பின், ஆரவலி பசுமை சுவர் திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்து 'ஏக் பெத் மா கே நாம்' பிரச்சாரத்தை தொடங்கினார். கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில், மே 7 அன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத தளங்கள் மீது இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, இராணுவம் 100 பயங்கரவாதிகளைக் கொன்றது. இந்த நடவடிக்கைக்கு சிந்தூர் என்று பெயரிடப்பட்டது.
சிந்தூர் மரக்கன்றுகளை நட்டியது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ''1971 இந்தியா - பாக். போரின் போது, வீரத்தின் முன்மாதிரியாக அமைந்த குஜராத்தின் கட்ச் பகுதி பெண்கள் இந்த மரக்கன்றை தனக்கு பரிசளித்ததாகவும், நமது நாட்டு பெண் சக்தியின் வீரம் மற்றும் உத்வேகத்தின் வலுவான அடையாளமாக இந்த செடி இருக்கும்'' என்றும் உணர்வு பொங்க தெரிவித்துள்ளார்.
unknown node