Payload Logo
இந்தியா

''பெங்களூருவில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது'' - பிரதமர் மோடி இரங்கல்.!

Author

gowtham

Date Published

PM Modi - RCB

பெங்களூர் :18 வருட காத்திருப்புக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், எம். சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்.சி.பி. பாராட்டு விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து பெங்களூருவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ''பெங்களூரில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சோகமான தருணத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node