Payload Logo
உலகம்

போர் நிறுத்தம் அமல்: 'தயவுசெய்து சண்டை நிறுத்த‌த்தை மீறாதீர்கள்' - அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!

Author

gowtham

Date Published

israel - iran - america - war

அமெரிக்கா :கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் அறிவித்தார்.ஆரம்பத்தில் இதனை மறுத்த ஈரான், தெற்கு இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகளில், ஈரான் தனது இறுதி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது, இதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்று அதிகாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலும் ஈரானும் "முழுமையான போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியதாகக் கூறி, "12 நாள் போர்" என்று முடிவுக்கு வருவதாக தெரிவித்திருந்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, "இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பகுதிகள் மீது ஈரானிய தாக்குதல்களைத் தொடர்ந்து போர்நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரசு நடத்தும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பின்னர் டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில், ''போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இரு நாடுகளும் போர் ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

[caption id="attachment_966321" align="aligncenter" width="750"]trump x statement [Image - @Trump][/caption]