Payload Logo
தமிழ்நாடு

காவல் துறையில் எஸ்.ஐ. பதவிக்கான தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!

Author

gowtham

Date Published

Police Exam - SI Exam

சென்னை :தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் (SI), தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்த 1,299 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் SI தேர்வை ஒத்திவைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி இடம்பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பால் 20% ஒதுக்கீட்டில் தேர்வாகும் காவலர்களுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனால், அதற்கான விளக்கங்கள் வரும் வரை, எஸ்ஐ தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைபத்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விரைவில் SI தேர்வு தேதி TNUSRB இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.