Payload Logo
தமிழ்நாடு

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

Author

gowtham

Date Published

student -10th mark

பொள்ளாச்சி :பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம் ஆண்டு பொதுத் தேர்வில் ஆரம்பத்தில் 494 மதிப்பெண்கள் (500-க்கு) பெற்றிருந்தார். இது மிகவும் உயர்ந்த மதிப்பெண்ணாக இருந்தாலும், தனது மதிப்பெண்களை மறு மதிப்பீடு (Revaluation) செய்ய வேண்டும் என முடிவு செய்து, மறுகூட்டல் செயல்முறைக்கு விண்ணப்பித்தார். மறுகூட்டலில் அவரது விடைத்தாள்கள் மீண்டும் பரிசோதிக்கப்பட்டு, மதிப்பெண்கள் 499 ஆக உயர்ந்தன. இதன் மூலம், தமிழ்நாடு மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்தார். சமூக அறிவியல் பாடத்தில் பெற்றிருந்த 95 மதிப்பெண்களை மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 99, மீதி அனைத்துப் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். இந்த சாதனை குறித்து குருதீப்பின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் பெருமைப்படுத்தியுள்ளனர், மேலும் அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.