போதைப்பொருள் விவகாரம் - ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை.!
Author
gowtham
Date Published

சென்னை :போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் என்பவரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரசாத் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஸ்ரீகாந்த்தை மருத்துவ பரிசோதனைக்காக போலீஸ் அழைத்து சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கானா நாட்டைச் சேர்ந்த நபர், பிரதீப் குமார் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போலீசார் ஸ்ரீகாந்துக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதாகவும், இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறுகின்றன. இந்த பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
மருத்துவ பரிசோதனையின் அறிக்கைகள் வெளியான பின்பு காவல்துறையின் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. அவர் கைது குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் முடிவுகள் இரத்தப் பரிசோதனை குறித்து முடிவுகள் குறித்தும தகவல்களும் வெளியாகவில்லை.