Payload Logo
தமிழ்நாடு

கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம் - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.!

Author

gowtham

Date Published

MLA Sathasivam - Ramadoss

சென்னை :பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில் இருந்து ராமதாஸ் நீக்கி அதிர்ச்சி அளித்து வருகிறார்.

அந்த வகையில், இப்பொது சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளராக இருந்த மேட்டூர் தொகுதி எம்எல்ஏ சதாசிவம், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவின்படி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.  சதாசிவத்திற்கு பதிலாக ராஜேந்திரன் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.

கட்சி நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் நீக்குவது தொடர்பாக இருவரும் தனித்தனியாக முடிவுகள் எடுத்து வருகின்றனர், இது கட்சிக்குள் உட்கட்சிப் பூசலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக, சதாசிவம் இன்னும் ஒரு மாதத்தில் ராமதாஸும் அன்புமணியும் ஒன்றிணைவார்கள் என்று கூறி, கட்சியில் உள்ள குழப்பம் தற்காலிகமானது என விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.