Payload Logo
தமிழ்நாடு

"திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட் டவுன் துவங்கியது" - பாமக தலைவர் அன்புமணி.!

Author

gowtham

Date Published

AnbumaniRamadoss

திருவள்ளூர் :பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியே 2026-ல் ஆட்சி அமைக்கும் எனவும் திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டதாகவும் அன்புமணி கூறியுள்ளார்.

பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே நீண்ட காலமாக உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில்,  திருவள்ளூரில் நடக்கும் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, ''தமிழகத்தில் சமூகநீதி, வேலைவாய்ப்பு, விவசாயிகள், பெண்களின் நலன் என எந்தத் துறையிலும் வளர்ச்சி இல்லை என்பதால் அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்றார்.

கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் 2026ல் பாமக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும், அதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

மேலும், என் மீது கோபம் இருந்தால் தயவு செய்து மன்னித்துவிடுங்கள் என ராமதாஸிடம், அன்புமணி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார். ஒரு தந்தையாக நீங்கள் ஆணையிடுவதைச் செய்யத் தான் தயாராக இருப்பதாகவும், இந்தியாவின் மூத்த தலைவரான அய்யா (ராமதாஸ்) நீண்ட உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என வாழ்த்தினார்.