Payload Logo
தமிழ்நாடு

இந்த 10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழுக் கூட்டம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

Author

bala

Date Published

PMK anbumani

சென்னை :தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி விவகாரம் என்பது எப்போது முடிவுக்கு வரும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்று தொண்டர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அன்புமணி – ராமதாஸ் இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இருவரையும் சமரசம் செய்வதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதே சமயம்,  மற்றொரு பக்கம் பாமகவில் குழப்பங்கள் நிலவினாலும் தேர்தலுக்கான வேளைகளில் ஆர்வத்தை காட்ட தொடங்கியுள்ளது. அதன்படி, பாமக முதற்கட்டமாக 10 மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியீட்டு இருக்கும் பதிவில் " பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது. முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.என்னென்ன மாவட்டங்கள்?மேற்கண்ட அனைத்து மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள். சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" எனவும் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

unknown node