Payload Logo
தமிழ்நாடு

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி... "அவருக்கு அதிகாரமில்லை" டென்ஷனான அருள்!

Author

bala

Date Published

pmk arul mla

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் குளித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியான சூழலில், பா.ம.க சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். புறகு அவர் நலமுடன் சிகிச்சை பெற்று மீண்டு வரவேண்டும் என அன்புமணியும் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்.

பிறகு அருள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று விடும் திரும்பினார். இதனையடுத்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அன்புமணியின் கூட்டு பிரார்த்தனை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அருள் " கூட்டு பிரார்த்தனை கூட்டம் என்பது இறந்தவர்களுக்கு தான் செய்வார்கள். நான் இன்னும் இறக்கவில்லை உயிரோடு தான் இருக்கிறேன். அதை போல, அன்புமணி நடத்திய கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் நான் மருத்துவமனையில் அனுமதி ஆகவில்லை.

மன அழுத்தம் காரணமாக தான் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னுடைய மருத்துவ குறிப்பு பற்றிய விவரங்கள் கூட அங்கு இருக்கிறது வேண்டுமென்றால் அதைப்பார்த்துக்கொள்ளுங்கள்" என அருள் பேசியிருந்தார். அவர் பேசியதை தொடர்ந்து அடுத்ததாக, இன்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசுகையில் “எம்.எல்.ஏ அருள் எனக்கு துணையாக, என்னோடு தான் பயணிக்கிறார். இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கக் கூடிய மாநில தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் நிற்கப் போகிறார்கள். இவர்களைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். இவர்கள்தான் வருங்கால சட்டமன்ற உறுப்பினர்கள்,” என்று  திட்டவட்டமாக தெரிவித்தார்.

எனவே, ஏற்கனவே பாமகவில் குழப்பங்கள் ஓடிக்கொண்டு இருந்த நிலையில், இது கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தியது. இப்படியான சூழலில் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக  க. சரவணன் என்பவரை நியமனம் செய்து அருளை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார்.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் " பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக திரு க. சரவணன் DME, அவர்கள் இன்று (25.06.2025 புதன்கிழமை முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு சேலம் மேற்கு சேலம் வடக்கு. சேலம் தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள, பாட்டாளி மக்கள் கட்சியின், அனைத்து நிலை நிர்வாகிகளும், முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என அறிவித்துள்ளனர். இதனையடுத்து, தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் " என்னை பொறுப்பில் இருந்து நீக்க அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை என" கோபத்துடன் தெரிவித்தார்.