Payload Logo
இந்தியா

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி.! சிறப்பம்சங்கள் என்னென்ன?

Author

gowtham

Date Published

chenab bridge - pm modi

காஷ்மீர் :உலகின் மிக உயரமான பாலத்தைக் கொண்ட சேனாப்பாலம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் இணைக்கும் ரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்து, கையில் தேசியகொடியை ஏந்தியவாரே பாலத்தில் நடந்துசென்றார். திறந்து வைத்த பின், 359 மீட்டர் உயரத்தில் 1,315 மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள இப்பாலத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

இந்தப் பாலம் பாரிஸின் ஈபிள் கோபுரத்தின் உயரத்தை விட உயரமானது, இதில் இயக்கப்பட காத்ரா -ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயிலில் அவர் பயணித்தார். மேலும் இது உதம்பூர் ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாகும். நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

இதுதவிர,ரூ.46,000 கோடி மதிப்பிலான பல திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மொத்தத்தில், பாலம் வியக்கத்தக்க வகையில் 653 கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளது. இது வெறும் 11 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மோடியின் முதல் வருகை இதுவாகும்.

பிரதமரின் வருகையையொட்டி கத்ராவில் நடைபெற்ற பொது பேரணியின் போது அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிறப்பு பாதுகாப்பு குழு (SPG), ராணுவம், மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPFs) மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை உள்ளிட்ட பலத்த பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர்.ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள செனாப் ரயில் பாலம், உலகின் மிக உயரமான ரயில்வே வளைவு பாலமாகும். இது 1,315 மீட்டர் நீளமுள்ள எஃகு வளைவு பாலமாகும், இது நில அதிர்வு மற்றும் காற்று நிலைமைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, செனாப் மற்றும் அஞ்சி பாலங்கள், 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டாலும், அவற்றுக்கு எதுவும் நடக்காத வகையில் கட்டப்பட்டுள்ளன. செனாப் பாலம் உலகின் மிக உயரமான ரயில் வளைவு பாலமாகும். இந்த பாலம் இரண்டு மலைகளுக்கு இடையில் கட்டப்பட்டுள்ளது, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான இணைப்பை மேம்படுத்துவதில் பாலத்தின் முக்கிய பணியாக இருக்கும்.

பாலத்தில் நகரும் வந்தே பாரத் ரயில் மூலம், கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2-3 மணிநேரம் குறையும். மணிக்கு 260 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகத்தைத் தாங்கும் வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் 24 மணி நேர கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில், சுழலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.