விமான விபத்து : "எனது இதயம் நொறுங்கியது" பிரதமர் மோடி வேதனை!
Author
bala
Date Published

குஜராத் :மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி கரும்புகையால் சூழ்ந்துள்ளது. எனவே, சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்பு படையினரும், தீயணைப்பு துறையினரும் தீவிரமாக பணிகளை மேற்கொன்டு வருகிறார்கள். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
READ MORE-இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் " அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, இந்த விமான விபத்து சம்பவம் என்னை மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. நிச்சயமாக வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை உடைக்கிறது. இந்த சோகமான நேரத்தில், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் மீது தான் எண்ணங்கள் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகப் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தேன். தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்" எனவும் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
unknown nodeஅதைப்போல, ராகுல்காந்தியும் தனது எக்ஸ் வலைத்தள பக்கதில் "அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து மனதை உடைக்கிறது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினர் உணரும் வலி மற்றும் என்னால் யோசிக்க கூட முடியவில்லை அந்த அளவுக்கு பதட்டமாக இருக்கிறது. நிர்வாகத்தின் அவசர மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் மிக முக்கியமானவை - ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம். காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்" எனவும் கூறியுள்ளார்.
unknown node