Payload Logo
கிரிக்கெட்

அனைத்து விதமான கிரிக்கெட்டிற்கும் குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Author

gowtham

Date Published

Piyush Chawla

டெல்லி :இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2006-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.

3 டெஸ்டில் 7 விக்கெட்களும், 25 ODI-ல் 32 விக்கெட்களும், 7 டி20-ல் 4 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார். . பியூஷ் சாவ்லா இதுவரை நான்கு அணிகளுக்காக (PBKS, KKR, CSK மற்றும் MI) ஐபிஎல்லில் விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் 192 விக்கெட்களை சாய்த்து அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.

தனது ஐபிஎல் வாழ்க்கையில், சாவ்லா 192 போட்டிகளில் விளையாடி மொத்தம் 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் கடைசி ஐபிஎல் சீசன் 2022-24 க்கு இடையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். 13 ஆண்டுகளுக்கு முன்பு தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார்.

ஓய்வு குறித்து 36 வயதான பியூஷ் சாவ்லா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "20 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் கழித்த பிறகு, இந்த அழகான விளையாட்டுக்கு விடைபெற வேண்டிய நேரம் இது. இந்தியாவுக்காக விளையாடுவதிலிருந்து 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியின் ஒரு பகுதியாக இருப்பது வரை, இந்த நம்பமுடியாத பயணத்தின் ஒவ்வொரு தருணமும் ஒரு ஆசீர்வாதத்தைத் தவிர வேறில்லை. இந்த நினைவுகள் எப்போதும் என் இதயத்தில் நிலைத்திருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.