நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!
Author
gowtham
Date Published

நாகை :தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இந்த மீனவர்கள் இரண்டு பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர்.
அப்போது, இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களைத் தாக்கி, மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதல் நாகை மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதேபோன்ற சம்பவங்கள் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது அவ்வப்போது நடத்தப்படுவதாகவும், இது தொடர்கதையாகி வருவதாகவும் உள்ளது.
ஆம்.., ஒருபக்கம் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் சம்பவம் தொடர் கதையாகி இருக்க, மற்றொரு பக்கம் இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களின் பொருட்களை அள்ளி செல்லும் அதிர்ச்சிகர சம்பவங்கள் நடைபெறுகின்றன.