Payload Logo
உலகம்

"அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்'' - பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

Author

gowtham

Date Published

pakistan army chief america

வாஷிங்டன் :சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியை சந்திக்காமல் மாநாட்டின் பாதியிலேயே டிரம்ப் வெளியேறினார்.

மோடியை சந்திக்காத டிரம்ப், பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்க்கிறது என்று குற்றம் சாட்டப்படும் பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர் உடன் உணவு சாப்பிட நேரம் கொடுத்துள்ளார். இந்த சந்திப்பு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றுள்ளது.

வெள்ளை மாளிகையில் டிரம்ப் உடனான விருந்துக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர், "இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்க இருந்த அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், தாக்குதல் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசீம் முனீரை சந்திப்பிற்கு பின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் "பாகிஸ்தான் எனக்கு பிடித்த நாடு. மோடி ஓர் அற்புதமான மனிதர். நேற்று இரவு அவரிடம் பேசினேன். அவருடன் வணிக ஒப்பந்தம் போடவிருக்கிறோம்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான சண்டையை நான்தான் நிறுத்தினேன். சண்டையை நிறுத்த பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர் பெரும் உதவியாக இருந்தார். மோடியும் உதவினார். ஆனாலும் இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான சண்டையை நான்தான் நிறுத்தினேன்" கருத்து தெரிவித்துளளார்.