Payload Logo
சினிமா

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

Author

gowtham

Date Published

Kamal Haasan - Ayushmann - Oscar Academy

லாஸ் ஏஞ்சல்ஸ் :98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று நடைபெறுகிறது. இந்த விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும். விருது பரிந்துரைகளுக்கான வாக்களிப்பு ஜனவரி 12 முதல் ஜனவரி 16 வரை நடைபெறும். பரிந்துரைகள் ஜனவரி 22 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த முறை நிகழ்ச்சியை கோனன் ஓ'பிரையன் தொகுத்து வழங்குவார்.

இந்த நிலையில், 2025 ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய திரைத்துறையில் இருந்து நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு ஆஸ்கர் விருது குழு அழைப்பு விடுத்துள்ளனர். உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய 534 கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அகாடமியில் உறுப்பினராக அழைக்கப்படுவது திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, திரைப்படத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்களை உறுப்பினர்களாக இணைத்து, ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வு செயல்முறையில் பங்கேற்க அனுமதிக்கும் ஒரு மதிப்புமிக்க அங்கீகாரமாகும்.

அகாடமி உறுப்பினர்கள், ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைகளை முன்மொழிந்து, இறுதி வாக்கெடுப்பில் வெற்றியாளர்களை தீர்மானிக்கின்றனர். இந்த ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற 'அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்' அமைப்பின் உறுப்பினர் பதவிக்கு அழைக்கப்பட்ட 534 பேரில் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா மற்றும் அரியானா கிராண்டே ஆகியோர் அடங்குவர்.

இந்த அழைப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டால், அகாடமி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11,120 ஆக இருக்கும், அவர்களில் 10,143 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்று சொல்லப்படுகிறது. கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா தவிர, நடிகர் நடிகை கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரன்வீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்பட இயக்குனர் பாயல் கபாடியா ஆகியோரும் இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.